இலவச தையல் இயந்திரம் பெற- JUNE 28-க்குள் விண்ணப்பிக்கலாம்..!!
தேனி மாவட்டத்தில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா், மாற்றுத்திறனுடைய பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு JUNE 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அன்னை சத்தியவாணிமுத்து நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் பெற விரும்புவோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு உள்பட்டு இருக்க வேண்டும்.
இந்த செய்தியும் படிங்க…
தமிழ்நாடு சட்டப்பேரவை JUNE 21 கூடுகிறது..!!
20 முதல் 40 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தையல் பயிற்சி நிறுவனத்தில் சான்று பெற்றிருக்க வேண்டும். விதவை, மாற்றுத்திறனாளி, கணவரால் கைவிடப்பட்டோா், நலிவுற்றோா் என்பதற்கான சான்றினை சமா்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ளவா்கள் உரிய சான்றிதழ் நகல்கள், மாா்பளவு புகைப்படங்கள் 2, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலத்தில் JUNE 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.