சிறு, குறு தொழிலாளர்களின் வங்கி கடன் தள்ளுபடி: என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்..!!
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறு, குறு தொழில்கள் செய்பவர்கள் மற்றும் குடிசை தொழில், கைத்தறி தொழில்கள் செய்து வாழ்க்கை நடத்தி வந்த லட்சக்கணக்கானோர் கடந்த 15 மாதங்களாக கொரோனாவால் சிக்கி, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். Lockdown அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொழில் நடத்த முடியாமலும், வங்கி உள்ளிட்ட பல இடங்களில் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமலும் வியாபாரிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இந்த செய்தியும் படிங்க…
RDO அலுவலகங்கள் நவீனமயமாக்க செயல் திட்டங்கள்: அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்..!!
சிறு, குறு தொழில் செய்பவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால் வங்கிகளில் வாங்கிய வாகன கடன், நகைக்கடன், தனிநபர் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும். இதுபோல் வீடு மற்றும் தொழில்கூடங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கான மின் கட்டணத்தை அரசே கட்டவேண்டும். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வழிபிறக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.