Gold Hallmark: ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளை என்ன செய்வது..?? - Tamil Crowd (Health Care)

Gold Hallmark: ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளை என்ன செய்வது..??

 Gold Hallmark: ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளை என்ன செய்வது..??

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பதற்கான விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இனிமேல் அனைத்து தங்க நகைகள் மற்றும் பிற பொருட்களுக்கு ஹால்மார்க்கிங் கட்டாயமாகிவிட்டது.

இந்நிலையில், வீடுகளில் வைக்கப்பட்டுள்ள ஹால்மார்க்கிங் இல்லாத தங்கம் அல்லது தங்க நகைகளுக்கு என்ன நடக்கும் என்ற கேள்வி மக்களின் மனதில் எழுகிறது. அதற்கும் ஹால்மார்க்கிங் செய்ய வேண்டுமா? என்ற கேள்வியும் எழுகிறது. வீட்டில் உள்ள தங்கத்தின் ஹால்மார்க் முத்திரை இல்லாவிட்டல், அதற்கு எந்த மதிப்பும் இருக்காதா என்ற சந்தேகங்களும் உள்ளன.

இந்த செய்தியும் படிங்க…  

PAN CARD தொலைந்தால் 5 நிமிடத்தில் பெறலாம்.! EASY STEPS ONLY..!!  

தங்கத்தின் விலை விண்ணை தொட்டுள்ள நிலையில் பணத்தை அதிகம் கொடுத்து வாங்கும் தங்கம் ( Gold), நாம் கொடுக்கும் விலைக்கு ஏற்ற சுத்தமானதாக உள்ளதா என்றால், பல இடங்களில் நிச்சயம் அவ்வாறு இல்லை என்று தான் கூற வேண்டும். இதில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்காக, தங்க நகைகளை விற்கும் போது, கடைக்காரர்கள் ஹால்மார்க் முத்திரையுள்ள (Hallmark) நகைகளை தான் விற்பனை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாட்டில் தங்க ஹால்மார்க் முத்திரையுடன் நகைகளை விற்பது கட்டாமாக்கப்படவில்லை. பல பெரிய நகைக்கடைக்காரர்கள் ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளைத் தான் விற்பனை செய்கிறார்கள்.

இந்த புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, தங்க நகை விற்பனையாளர்கள் இனி, 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகை விற்பனை செய்ய வேண்டும். மேலும் இந்திய தர நிர்ணய அமைப்பு BIS சான்றான ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இடம்பெற வேண்டும்.

கோல்ட் ஹால்மார்க்கிங் விதியை அமல்படுத்திய பின்னர், வீட்டில் பழைய தங்கம் இருந்தால் என்ன நடக்கும் என கேள்வி எழலாம். வீட்டில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை பொறுத்தவரை எளிதாக நகைக்கடைக்காரர்களுக்கு விற்கலாம். இதனால் வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு பாதிப்பு ஏதும் இல்லை. இந்த புதிய விதி, நகை கடைக்காரகளுக்கு மட்டுமே பொருந்தும். நகைக்கடைக்காரர்கள் இனி ஹால்மார்க் அடையாளமின்றி தங்கத்தை விற்க முடியாது.

இந்த செய்தியும் படிங்க… 

PF கணக்கில் AADHAAR  இணைக்க SEPTEMBER  1-ந் தேதி வரை கால நீட்டிப்பு :மத்திய அரசு உத்தரவு..!! 

வாடிக்கையாளர் தனது தங்க நகைகளை அதன் தூய்மையின் அடிப்படையில் சந்தை மதிப்பில் விற்க முடியும். ஹால்மார்க் முத்திரை அதன் விலையில் எந்தவிதமான பாதகமான விளைவையும் ஏற்படுத்தாது. நகைக்கடைக்காரர் விரும்பினால், பழைய நகைகளை ஹால்மார்க்கிங் செய்யலாம். ஒரு நகை வியாபாரி வாடிக்கையாளரிடமிருந்து ஹார்மார்க் இல்லாத தங்கத்தை எடுத்துக் கொள்ள மறுத்தால், அவர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்.

தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களுக்கான தங்க ஹால்மார்க்கிங் விதிகளை மத்திய அரசு 2019 நவம்பரில் அறிவித்திருந்தது. இந்த விதிகள் 2021 ஜனவரி முதல் அமல்படுத்தப்பட இருந்தன. ஆனால் கொரோனா தொற்றுநோய் (Coronavirus) காரணமாக, நகைக்கடைக்காரர்கள் அரசாங்கத்திடம் காலகெடுவை நீட்டிக்குமாறு கோரினர். JUNE 1 வரை, தங்க ஹால்மார்க்கிங் காலக்கெடு 4 முறை நீட்டிக்கப்பட்டது, அதன் பிறகு காலக்கெடு மீண்டும் JUNE 15 வரை நீட்டிக்கப்பட்டது.

Leave a Comment