தமிழ்நாட்டில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத 9 மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தியும் படிங்க…
“NEET தேர்வில் இருந்து தமிழகத்துக்கு முதல்வர் கண்டிப்பாக விலக்கு பெற்றுத் தருவார்”- அமைச்சர்..!!
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருப்பது குறித்து முறையிடப்பட்டது.
இதையடுத்து, வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடித்து முடிவுகளை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ், ஹேமந்த் குப்தா ஆகியோர் உத்தரவிட்டனர்.
மேலும் CORONA தொற்று காரணத்தை கூறி அவகாசம் கோரக்கூடாது எனக் கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், SEPTEMBER 15ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியது வரும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்தனர்.