ஆளுநர் உரையை எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்: திமுக அடக்க முடியாத யானை-மு.க.ஸ்டாலின் பதில்..!!
‘யானையின் 4 கால்களைப் போல் சமூகநீதி, மொழிப்பற்று, சுயமரியாதை, மாநில உரிமைதான் திமுகவின் பலம்’ எனக் கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த செய்தியையும் படிங்க…
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பதவிக்கு எதிரான வழக்கு- தள்ளுபடி..!!
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்றைய விவாதத்தின்போது யானையும் இல்லை மணியோசையும் இல்லை என ஆளுநர் உரையை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துப் பேசினார். அவரது பேச்சுக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ”பொறுத்தார் பூமியாழ்வார் என்பது பழமொழி. அப்படித்தான் நாங்கள் பத்தாண்டுகள் பொறுத்திருந்து ஆட்சிக்கு வந்துள்ளோம். அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்கமுடியாத யானை.
யானைக்கு 4 கால்கள் தான் பலம். அதுபோல திமுகவுக்கு சமூக நீதி, மொழிபற்று, சுய மரியாதை, மாநில உரிமை போன்ற 4 கொள்கைகள் தான் பலம். இந்த 4 கொள்கைகளை அடிப்படையாக வைத்தே திமுக செயல்படும்” என்று பேசினார்.