தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் -இன்று மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம்..!!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டவை, ஆளுநர் உரையில் இடம்பெற்ற திட்டங்கள், முதல்வர் அறிவித்த திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த செய்தியையும் படிங்க…
NEET தேர்விலிருந்து உறுதியாக விலக்கு பெறுவோம்- DMK :அதற்கு கண்டிப்பாக துணை நிற்போம்-AIADMK..!!
முன்னதாக, தமிழகத்தின் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் சென்னை கலைவாணா் அரங்கத்தில் ஜூன் 21 ஆம் தேதி(திங்கள்கிழமை) ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
பின்னர் ஆளுநர் உரை மீதான பல்வேறு விவாதங்கள் நடைபெற்ற நிலையில், இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வரின் பதிலுரையை அடுத்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.