Public Provident Fund: SUPER சேமிப்பு திட்டம்..!!
PPF என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஒரு சேமிப்பு திட்டமாகும். இதனை மத்திய அரசாங்கம் நிர்வகித்து வருகிறது. 15 ஆண்டுகளில் மெச்சூர்ட் ஆகும் இந்த கணக்கில் உங்களுக்கான ரிட்டர்ன்ஸ் கேரண்ட்டியான ஒன்று. PPF பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருந்தாலோ அல்லது தங்களின் குழந்தைகளின் கல்வி தேவைக்காவோ PPFகணக்கில் இருக்கும் பணத்தை முழுமையாக ஒருவர் எடுத்துக் கொள்ள முடியும்.
உயர்க்கல்வி :
உயர்க்கல்வி படிக்க விரும்பும் குழந்தைகளின் படிப்பு தேவைக்காக பணம் எடுக்கப்படுகிறது என்றால், இந்திய உயர்க்கல்வி துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட சான்றுகள் மற்றும் ஆவணங்களை கொடுத்து அந்த பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
வெளிநாடுகளில் வாழ முடிவு எடுத்திருக்கும் பட்சத்தில், தன்னுடைய பாஸ்போர்ட், விசா மற்றும் வருமான வரி தாக்கல் ரிட்டர்ன்ஸ் ஆகியவற்றை சமர்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனாலும் மெச்சூரிட்டி முடிவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த கணக்கை மூட இயலாது.
PPF கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், சேமிக்கப்பட்ட பணம் யாருக்கு வழங்கப்படும்?
ஒரு வேலை PPF கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், மெச்சூரிட்டிக்கு முன்பே கணக்கை முடிக்க வேண்டிய நிலை இருப்பதால் இது கணக்கு திறக்கப்பட்ட தேதி முதல் அல்லது தேதியில் இருந்து அவ்வப்போது கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ள விகிதத்தை விட ஒரு சதவீதம் குறைவாக இருக்கும். வாரிசாக யாரை கணக்கு வைத்திருப்பவர் நியமித்தாரோ அவர் முழுமையாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மெச்சூரிட்டி ஆகும் காலம் வரை இது போன்ற சூழலில் காத்திருக்க வேண்டியது இல்லை. அதாவது கணக்கு வைத்திருப்பவர் இறந்தவுடன் அந்த கணக்கு ‘க்ளோஸ்’ செய்யப்பட்டுவிடும்.
PPF. கணக்கை யார் துவங்கலாம்?
இந்திய பிரஜைகள் யார் வேண்டுமானாலும் ரூ. 500 செலுத்தி இந்த கணக்கை துவங்க முடியும். 18 வயது குறைவானவர்களுக்காகவும் இந்த கணக்கு துவங்கிக் கொள்ளலாம்.