தொடக்க கல்வி பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு-நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்..!!
தொடக்க கல்வி பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரைமண்ட், பள்ளிக் கல்வி முதன்மை செயலாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கோரி கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2009ல் வழக்கு தொடரப்பட்டது. 2020 பிப்ரவரியில் வழங்கிய தீர்ப்பில், ‘தொடக்க கல்வி சிறப்பு விதிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மேல்நிலைக்கல்வியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 5 சதவீத உள் ஒதுக்கீடு செய்து பதவி உயர்வு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
இந்த செய்தியையும் படிங்க….
BREAKING: யாருக்கெல்லாம் PLUS TWO மறு தேர்வு: அமைச்சர் விளக்கம்..!!
மேலும் பள்ளி கல்வி செயலர் ஆய்வு செய்து 2 வாரத்தில் அரசாணை வெளியிட உத்தரவிடப் பட்டது. அதன்படி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த கல்வித்துறைக்கு மனு அளிக்கப்பட்டது. 4 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை. தேர்தல் நடத்தைவிதி என காரணம் கூறினர்.
தொடக்க கல்வி துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வு இன்றி பணியாற்றும் ஆசிரியர் நலன் கருதி கலந்தாய்வுக்கு முன் அரசாணை வெளியிட வேண்டும்.பதவி உயர்வு கலந்தாய்வு முடிந்தால் காலிப்பணியிடம் இன்றி காத்திருக்க வேண்டும். பதவி உயர்வால் அரசுக்கு கூடுதல் நிதி சுமை இல்லை. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும், என்றார்.