SBI வங்கியின் புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

SBI வங்கியின் புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!!

 பணம் ‘WITHDRAW ‘ செய்வதற்கும் GST: SBI வங்கியின் புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான SBI ஜூலை 1 முதல் அதன் ATM-கள் மற்றும் வங்கி கிளைகளிலிருந்து பணம் எடுப்பதற்கான புதிய விதிமுறைகள் மற்றும் கட்டணங்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய கட்டணங்கள் அடிப்படை சேமிப்பு கணக்கு(BSBD)வைத்திருப்போருக்கு பொருந்தும்.

இந்த செய்தியையும் படிங்க… 

 வங்கி சேமிப்பு கணக்கு: தொடங்கும் போது -அறிந்து கொள்ள வேண்டியவை..!! 

புதிய விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள்:

எந்தவொரு தனிநபரும் கணக்கு தொடங்குவதற்கான முறையான ஆவணங்களை வைத்திருக்கும் நிலையில், இந்த கணக்கைத் திறக்க முடியும். எந்தவொரு கட்டணமும் இன்றி சேமிக்கத் தொடங்குவதற்காக சமூகத்தின் பின்தங்கிய மக்களுக்காகவே பெரும்பாலும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கை நாட்டின் அனைத்து SBI-வங்கி கிளைகளிலும் திறக்கலாம் . குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை. அதிகபட்ச இருப்புக்கு எந்த வரம்பும் இல்லை.

ATM-ல் பணம் எடுப்பதற்கான கட்டணம் : 

  • வங்கி கிளையில் அல்லது ஏடிஎம்மில் மாதம் 4 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். 
  • அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும். 
  • நான்கு முறைக்கு மேல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் 15 ரூபாயும் GST-ம் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படும். 
  • ATM-ல் பணம் எடுக்கவும், SBI ATM மட்டுமல்லாமல் இதர வங்கி ATM-ல் பணம் எடுக்கவும் இதே கட்டணம் வசூலிக்கப்படும்.

செக்புக் கட்டணங்கள்: 

அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் 10 பக்க செக் புத்தகம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு பின் கட்டணம் வசூலிக்கப்படும். 

10 இலவச செக் பயன்படுத்தியபின் 10 செக் பயன்படுத்த 40 ரூபாயும் GST-ம், 25 செக் பயன்படுத்த 75 ரூபாயும்GST-ம், எமர்ஜென்சி செக் புத்தகத்துக்கு 50 ரூபாயுடன் GST  செலுத்த வேண்டும். இதில் 10 செக் கிடைக்கும். இருப்பினும், மூத்த குடிமக்கள் இந்த காசோலை புத்தக பயன்பாட்டு வரம்பு கிடையாது.

இந்த செய்தியையும் படிங்க… 

 Delta Plus  அதிக அளவில் பரவக்கூடியது : WHO( டெட்ரோஸ் அதானோம்) எச்சரிக்கை..!!

 வங்கி கிளைகளில் பணம் எடுத்தல்: 

வங்கி கிளை மற்றும் மற்ற மற்ற வங்கி கிளைகளில் நிதி அல்லாத பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் BBST கணக்கு வைத்திருப்பவர்களுக்கு SBI  எந்த கட்டணத்தையும் விதிக்காது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக SBI  தனது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பணத்தை எடுக்கும் வரம்பை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து மற்ற வங்கிக் கிளைகலிருந்து, வித்ட்ராயல் படிவம் மூலம் ரூ.25000 வரை பணம் எடுக்கலாம். மற்ற கிளைகளில் இருந்து காசோலை மூலம் இப்போது ரூ.1 லட்சம் வரை எடுக்க முடியும். மூன்றாம் தரப்பு பணம் எடுக்கும் வரம் ரூ.50, 000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Comment