8 வடிவ நடைபயிற்சியை- மேற்கொள்வதால் என்ன பலன்கள்..!! - Tamil Crowd (Health Care)

8 வடிவ நடைபயிற்சியை- மேற்கொள்வதால் என்ன பலன்கள்..!!

 8 வடிவ நடைபயிற்சியை- மேற்கொள்வதால் என்ன பலன்கள்..!!

நமது உடலில் இருக்கும் வர்மபுள்ளிகள் அதிகளவு உள்ளங்காலில் நிறைந்திருக்கிறது. இந்த 8 வடிவ நடைபயிற்சியை வெற்று காலில் செய்யும் போது அந்தப் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலில் உள்ள வர்மப் புள்ளிகளின் ஆற்றலை அதிகரிக்கிறது.

எட்டு என்பது இரண்டு அடுத்து அடுத்து உள்ள இரண்டு வட்டங்கள். இரண்டு வட்டங்களும் ஒரே மாதிரியான அளவுகள் உள்ளவை. வட்டத்தில் ஆரம் சரியாக நான்கு அடிகள். எந்தவிதமான கஷடமும் இல்லாமல் இருக்கும் ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். மொட்டை மாடி மிகவும் நல்லது. அல்லது வீட்டின் முன்புறம் இடத்தை தேர்வு செய்யலாம். குறைந்தது 20 அடி நீளம் – 12 அடி அகலம் உள்ள நீள் செவ்வக இடமாயிருக்கவேண்டும். வடக்கு தெற்காக இரண்டு வட்டங்கள் இருக்க வேண்டும். அதாவது நமக்கு தேவையான இடம்: வடக்கு தெற்காக 20 அடி – கிழக்கு மேற்காக 12 அடி. இப்போது ஒரு மைய புள்ளியை தேர்வு செய்யுங்கள்.

இந்த செய்தியும் படிங்க…

உடல் வெப்பத்தைத் தணிக்கும் -உணவுகள்..!! 

அந்த மைய புள்ளியில் இருந்து, வடக்கு திசையில் 4 அடி தள்ளி ஒரு புள்ளி வைக்கவும். இது வடக்கு வட்டத்தின் மையம். இதே போல் தேர்வு செய்யப்பட்ட மையப்புள்ளியிலிருந்து தெற்கு திசையில் 4 அடி தள்ளி ஒரு புள்ளி வைக்கவும். இது தெற்கு வட்டத்தின் மையப்புள்ளி. இப்பொழுது வடக்கு வட்டத்தின் மையத்தை அடிப்படையாக கொண்டு, 4 அடி ஆரத்தில் ஒரு வட்டம் வரையுங்கள். அதேபோல் தெற்கு வட்டத்தின் மையத்தை அடிப்படையாக கொண்டு, 4 அடி ஆரத்தில் ஒரு வட்டம் வரையுங்கள். இப்பொழுது இரண்டு வட்டங்களை உருவாக்கி விட்டீர்கள்.

எட்டு வடிவ கோட்டின் மீது நின்று பயிற்சியைத் தொடங்குங்கள். முதலில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 15 நிமிட நேரம் எட்டு வடிவ நடைபயிற்சியைச் செய்யுங்கள். முதல் 15 நிமிடங்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நடக்க வேண்டும். அடுத்த 15 நிமிடங்கள் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நடக்க வேண்டும். இந்த எட்டு பயிற்சியை எட்டி எட்டி செய்ய கூடாது. அதாவது வேக வேகமாக செய்ய கூடாது. அனுபவித்து ஒவ்வொரு அடி ஆக செய்யவேண்டும்.

பத்தாவது சுற்று முடியும் போது, மூச்சு வாங்க ஆரம்பிக்கும். அதாவது, உங்கள் நுரையீரல், காற்றை அதிகம் சுவாசிக்க துடங்கும். அதிகம் காற்று உள்ளே செல்லும்போது, ஆக்ஸிஜன் அளவு கூட ஆரம்பிக்கும். ஆக்ஸிஜன் கூட கூட, உடலிலுள்ள செல்கள் சுறு சுறுப்பாக தொடங்கும். பழைய செல்கள் அழிந்து, உயிரோட்டமுள்ள செல்கள் வளர ஆரம்பிக்கும்.

இடது புறம் வயிறு மற்றும் இடுப்பில் உள்ள தொங்கு சதைகள் குறைய தொடங்கும். அதே போல வலது புறம் உள்ள தொங்கு சதைகள் குறைய தொடங்கும். நாளடைவில் உடல் ஒரு நேர் கோடு (பனை மரம்) போல மாற ஆரம்பிக்கும்.

மூச்சு வேறு வழியில்லாமல் அதிகம் உள்ளேயும் வெளியும் செல்வதால், பிராண சக்தி வலுவடையும். அதாவது உயிர் சக்தி வலுவடையும். இதன் காரணமாக உள்ளுறுப்புகளில் தோன்றக்கூடிய பிரச்சினைகள் மறைய தோன்றும்.

இந்த செய்தியும் படிங்க…

உடல் எடையை குறைக்க – எளிய வழிமுறைகள் !!  

நீரிழிவு நோய் கட்டுக்குள் வர தொடங்கும். குடல் இறக்க பிரச்சினை தீர்வடையும். இடமும் வலமும் வளைந்து வளைந்து செல்வதால், உடல் சமநிலை கட்டுக்குள் வரும்.

Leave a Comment