7th Pay Commission Latest News Today:ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாத DA, DR மொத்தமாக கிடைக்குமா?
7th Pay Commission Latest News Today: மத்திய அமைச்சகங்களில் மாற்றுப்பணிகளில் ஈடுபட்டுள்ள (டெபுடேஷன்) அதிகாரிகளுக்கு ப்ரோபார்மா பதவி உயர்வு தொடர்பாக அரசாங்கம் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. தற்போது ப்ரோபார்மா பதவி உயர்வு கிடைக்காத, கேடருக்கு வெளியே பணியமர்த்தப்படாமல் இருந்தால், பதவி உயர்வுக்கு தகுதியுடையவர்களாக இருந்திருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் இந்த விளக்கம் தொடர்பு கொண்டுள்ளது.
பணியாளர் அமைச்சகம், பொது குறை தீர்க்கும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஆகியவை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிவிப்பில் இதை தெளிவுபடுத்தியுள்ளது.
மார்ச் 10 ம் தேதி வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், மாற்றுப்பணிகளில் ஈடுபடுத்தப்படாமல் இருந்தால் பதவி உயர்வு பெற தகுதியான அதிகாரிகளைப் பற்றி கூறப்பட்டுள்ளது. சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் (IAS Officers), தங்கள் மாநில கேடர்களுக்கு வெளியே மாற்றுப் பணிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளதால், அவர்களால் ப்ரொபார்மா பதவி உயர்வை பெற முடியாமல் போனது. இது குறித்து தெளிவான விளக்கம் தேவை என்று பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியப் பாதுகாப்பை அறிவிப்பு, “மத்திய பணியாளர் திட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் ஊதியம், திருத்தப்பட்ட ஊதிய கட்டமைப்பில் அவர்களின் ஊதியத்தை நிர்ணயித்த பின்னர், இந்த விதிகளின் கீழோ, அல்லது அவர்கள் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட பதவியில் அத்தகைய ஊதியத்தை நிர்ணயிப்பதை ஒழுங்குபடுத்தும் அறிவுறுத்தல்களின்படியோ, அவர்களது முந்தைய பணியில், அவர்கள் வாங்கி இருக்கக்கூடிய ஊதியத்திலிருந்து குறைவாக இருந்தால், அந்த ஊதியத்தில் உள்ள வேறுபாட்டிற்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும். இது குறித்து அரசாங்கத் தீர்மானம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து, அதாவது, 2016, ஜூலை 25 முதல், இந்த ஊதிய பாதுகாப்பு தனிப்பட்ட ஊதிய வடிவத்தில் அளிக்கப்படும். “
இது முதன்மையாக இரண்டு காரணங்களால் ஏற்படக்கூடும் என்று இந்திய அரசின் (Government Of India) செயலாளர் சந்தீப் குமார் சின்ஹா கூறினார்.
இது முதன்மையாக இரண்டு காரணங்களால் ஏற்படக்கூடும் என்று இந்திய அரசின் (Government Of India) செயலாளர் சந்தீப் குமார் சின்ஹா கூறினார்.
- தங்களது மாநில கேடருக்கு வெளியே மாற்றுப்பணியில் பணியனர்த்தப்பட்டுள்ள அதிகாரி அவரது பேட்சில் மிகவும் இளையவராக (ஜூனியராக) இருக்கலாம்.
- பதவி உயர்வுக்கு (Promotion) பரிசீலிக்கப்பட வேண்டிய பேட்சின் அனைத்து அதிகாரிகளும் மத்திய அமைச்சகங்களில் மாற்றுப்பணிகளில் ஈடுபட்டிருக்கலாம். இதனால், மாநில கேடரில், அவர்களது ஜூனியர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுக்கு போதுமான தகுதி இல்லாமல் இருக்கலாம்.