7th Pay Commission: DA உயர்வுக்குப் பிறகு (Central Government Employees) யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும்..?? - Tamil Crowd (Health Care)

7th Pay Commission: DA உயர்வுக்குப் பிறகு (Central Government Employees) யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும்..??

 7th Pay Commission: DA உயர்வுக்குப் பிறகு (Central Government Employees)  யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும்..?? 

ஜூலை மாதம் 14 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி முடக்கத்தை நீக்குவதற்கான பெரிய முடிவு எடுக்கப்பட்டது. 

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் செப்டம்பர் முதல் 28% அகவிலைப்படியைப் பெறத் தொடங்குவார்கள். ஆனால் இப்போது ஜூன் மாத அகவிலைப்படியையும் அரசாங்கம் விரைவில் சம்பளத்துடன் சேர்த்து கொடுக்கும் என்ற செய்தியும் வந்துகொண்டிருக்கின்றது. அப்படி நடந்தால், மொத்த அகவிலைப்படி 28% க்கு பதிலாக 31% ஆக உயரும்.

ஊதியத்தில் யாருக்கு எவ்வளவு உயர்வு இருக்கும்?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர், அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் தரத்திற்கு ஏற்ப சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். 7 வது ஊதியக்குழு (7th Pay Commission) மேட்ரிக்ஸ் படி, மத்திய அரசு ஊழியர்களின் நிலை -1 ன் சம்பள வரம்பில் குறைந்தபட்ச வரம்பு 

ரூ .18,000 ஆகவும் அதிகபட்ச வரம்பு ரூ .56900 ஆகவும் உள்ளது.

இந்த செய்தியும் படிங்க…

 AUGUST-1: ATM, Credit, Debit Card பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிகள் அமல்- Reserve Bank அறிவிப்பு..!! 

 அந்த வகையில் குறைந்தபட்ச சம்பளத்திலும் அதிகபட்ச சம்பளத்திலும் அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியரின் சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என்பதற்கான கணக்கீடு இங்கே. 

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 28% அகவிலைப்படியின் கணக்கீடு:

குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தில் (ரூ .18,000) கணக்கீடு:

1. ஊழியரின் அடிப்படை சம்பளம் – ரூ .18,000

2. புதிய அகவிலைப்படி (28%) – ரூ .5040 / மாதம்

3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) – ரூ .3060 / மாதம்

4. அதிகரித்த அகவிலைப்படி – 5040-3060 = ரூ .1980/மாதத்திற்கு

5. வருடாந்திர சம்பள உயர்வு – 1980X12 = ரூ 23760

அதிகபட்ச அடிப்படை ஊதியத்தில் (ரூ .56,900) கணக்கீடு

1. ஊழியரின் அடிப்படை சம்பளம் – ரூ .56,900

2. புதிய அகவிலைப்படி (28%) – ரூ .15,932/மாதம்

3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) – ரூ .9673 / மாதம்

4. அதிகரித்த அகவிலைப்படி – 15932-9673 = ரூ.6259 /மாதம்

5. வருடாந்திர சம்பள உயர்வு – 6259X12= ரூ.75108

முன்னதாக, 2020 ஜனவரியில், அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது.

 பின்னர் ஜூன் 2020 இல், 3 சதவிகிதம் அதிகரித்தது. 

இதற்குப் பிறகு, ஜனவரி 2021 இல் இது 4 சதவிகிதம் அதிகரித்தது. 

அதாவது, இந்த மூன்று அதிகரிப்பால், அகவிலைப்படி மொத்தம் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

 இப்போது அது 28%ஐ எட்டியுள்ளது. 

இப்போது ஜூன் மாதத்தில் 3 சதவிகிதம் அதிகரித்த பிறகு, அகவிலைப்படி 31 சதவிகிதத்தை எட்டும் (17+4+3+4+3).

ஜூன் மாதத்திற்கான 3% DA இன்னும் அதிகரிக்கவில்லை

ஜூன் 2021 க்கான அகவிலைப்படி (Dearness Allowance) இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், 2021 ஜனவரி முதல் மே வரையிலான AICPI தரவுகளிலிருந்து 3% அகவிலைப்படி மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. 3 சதவிகிதம் அதிகரித்த பிறகு, அகவிலைப்படி 31 சதவீதத்தை எட்டும். ஊழியர்களின் சம்பளம் மீண்டும் ஒரு முறை அதிகரிக்கும் என்பது உறுதி.

31% அகவிலைப்படியின் கணக்கீட்டை காணலாம்:

குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தில் (ரூ .18,000) கணக்கீடு:

1. ஊழியரின் அடிப்படை சம்பளம் – ரூ .18,000

2. புதிய அகவிலைப்படி (31%) – ரூ .5580/மாதம்

3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) – ரூ .3060 / மாதம்

4. அதிகரித்த அகவிலைப்படி – 5580-3060 = ரூ .2520/மாதம்

5. வருடாந்திர சம்பள உயர்வு – 2520X12 = ரூ. 30,240

அதிகபட்ச அடிப்படை ஊதியத்தில் (ரூ .56,900) கணக்கீடு

1. ஊழியரின் அடிப்படை சம்பளம் – ரூ .56,900

2. புதிய அகவிலைப்படி (31%) – ரூ . 17639/மாதம்

3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) – ரூ .9673 / மாதம்

4. அதிகரித்த அகவிலைப்படி – 17639-9673 = ரூ.7966 /மாதம்

5. வருடாந்திர சம்பள உயர்வு – 7966X12= ரூ.95,592

HRA  உள்ளிட்ட பிற கொடுப்பனவுகளைச் சேர்த்த பின்னரே இறுதி சம்பளம் எவ்வளவு இருக்கும் என்ற கணக்கீடு வரும். மேலே அளிக்கப்பட்டுள்ள கணக்கீடு அகவிலைப்படி அதிகரித்த பிறகு ஊழியர்களின் (Central Government Employees) சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்ற அளவீடு மட்டுமே ஆகும்.

Leave a Comment