7.5% இட ஒதுக்கீடு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றத்தில் 07-04-2022 தீர்ப்பு..!!

 7.5% இட ஒதுக்கீடு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றத்தில்

 07-04-2022  தீர்ப்பு..!!

அரசு உதவு பெறும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 07-04-2022 தீர்ப்பு வழங்குகிறது. அரசு பள்ளி மாணவர்கள் போல் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

மருத்துவம், பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% உள் ஒதுக்கீட்டை விரிவுபடுத்த தனியார் பள்ளி நிர்வாகங்கள் அளித்துள்ள மனுவில் கோரிக்கை வைத்துள்ளது. எனவே, வழக்கு விசாரணை ஏற்கனவே முடிந்ததை அடுத்து, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு 07-04-2022 தீர்ப்பளிக்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உள் ஒதுக்கீட்டை எதிர்த்தும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment