6 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி- தமிழகம் வந்தது..!!
மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இருந்து ஆறு லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் நேற்று தமிழகம் வந்தன.கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனால் தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே ‘மத்திய மருந்து தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும்’ என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து 60 ஆயிரம் பாட்டில்கள் இடம் பெற்ற ஆறு லட்சம் ‘டோஸ்’ உடைய ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கி உள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
‘விரைவில் நலம் பெறுங்கள் ராகுல்’- மோடி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து..!!
இந்த தடுப்பூசி மருந்து பாட்டில்கள் புனேயில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ விமானத்தில் நேற்று மதியம் 3:30 மணிக்கு சென்னை வந்தன. மொத்தம் 50 பார்சல்களில் கொண்டு வரப்பட்ட அந்த தடுப்பூசிகள் கன்டெய்னர்களில் ஏற்றப்பட்டு அரசு மருந்து கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.