5 நாட்களுக்கு இடியுடன் மழை.. இயல்புக்கு அதிகமான வியர்வை – தலை சுற்ற வைக்கும் வானிலை அறிக்கை..!!
சென்னையில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு அதிகமாக வியர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க….
உலக அளவில் பாதிப்பில் முதலிடம் தொட்ட இந்தியா.! – அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது.!
நாளை(ஏப்.23) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
வரும் ஏப்ரல் 24-ம்தேதி முதல் 26-ம் தேதி வரை தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும்.
இந்த செய்தியையும் படிங்க….
ஆசிரியர்கள் வருகை- ஏப்ரல் 30 வரை உறுதி செய்யப்படும்…!!
கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். சென்னையைப் பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு அதிகமாக வியர்க்கும் என்று கூறியுள்ளார்.