5 ஆண்டுகளில் 7 லட்சம் சேமிப்பு-ரெக்கரிங் டெபாசிட் திட்டம்..!!

 5 ஆண்டுகளில் 7 லட்சம் சேமிப்பு-ரெக்கரிங் டெபாசிட் திட்டம்..!!

போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம்:

அஞ்சல் சேமிப்பில்  சிறந்த வருமானத்தை வழங்கக்கூடிய சேமிப்பு திட்டத்தில் ஒன்று தான் போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் மிகக் குறைந்த பணத்தில் முதலீடு செய்ய தொடங்கி கைநிறைய லாபம் பார்க்கலாம்.

உங்கள பணத்திற்கு இந்த திட்டத்தில் முழு பாதுகாப்பு உண்டு. மாதத்திற்கு ரூ.100 முதல் முதலீடு செய்ய தொடங்கலாம்.

இந்த செய்தியையும் படிங்க…

PF (பிஎஃப்) விதிகளில் இந்த நிதியாண்டு முதல் புதிய மாற்றம் செய்துள்ளது- மத்திய அரசு..!!

அதிகபட்ச தொகைக்கு வரம்பு:

குறிப்பாக இந்த திட்டத்தில் அதிகபட்ச தொகைக்கு வரம்பு எதுவும் இல்லை.இந்த ரெக்கரிங் டெபாசிட் கணக்குக்கான திட்டத்தில் தற்சமயம் 5.8% வட்டி வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லை கால வரம்பு ஆண்டுகள் அதிகம் இல்லை. வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே. அப்படியென்றால் 5 ஆண்டுகளில் உங்களின் மாத சேமிப்பைப் பொருத்து லாபம் பெறும், முதிர்வு தொகை அதிகரிக்கும். 

இந்த திட்டத்திற்கான கணக்கை நீங்கள் மாதத்தின் 1 முதல் 15 ஆம் தேதிக்குள் திறந்தால் மாதம் 15 ஆம் தேதிக்குள் கணக்கில் பணம் டெபாசிட் செலுத்த வேண்டும். 

அல்லது 15 ஆம் தேதிக்கு பின் திறந்தால் மாதத்தின் கடைசி வேலை நாளில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை தான் கணக்கு.

முதிர்வு தொகை::

நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 முதலீடு செய்தால் நீங்கள் 5 ஆண்டுகள் கழித்து 7 லட்சம் முதிர்வு தொகையாக பெறலாம். அதாவது இப்போது வழங்கப்படும் வட்டி 5.8% படி, மாதம் ரூ 10,000க்கு வட்டித் தொகை ரூ.99,967 ஆக கிடைக்கும். 

நீங்கள் 5 ஆண்டுகளில் சேமிக்கும் பணத்தின் மதிப்பு ரூ. 6 லட்சம். அத்துடன் வட்டியும் சேர்த்து இறுதியாக உங்கள் முதிர்வு தொகை சுமார் ரூ.7 லட்சமாக உங்கள் கைக்கு கிடைக்கும்.

அபராதம் :

இந்த ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் முறையாக டெபாசிட் செய்யாவிட்டால் சில நேரங்களில் அதற்கு அபராதம் கட்ட வேண்டியிருக்கும்.தொடர்ந்து 4மாதங்கள் கணக்கை திறந்த பின்பு பணத்தை டெபாசிட் செய்யவில்லை என்றால் சேமிப்புக் கணக்கு மூடப்பட்டுவிடும். 

அப்படி கணக்கு மூடப்பட்டுவிட்டால் இரண்டு மாதங்கள் கழித்தே அதை ஆக்டிவேட் செய்ய முடியும்.

அதே போல் கணக்கு தொடங்கி ஒரு வருடத்திற்குப் பிறகு நீங்கள் கடன் பெறலாம். அந்த கடனை மொத்தமாக அல்லது தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம். மேலும் இந்த திட்டத்தில் ஆறு மாதங்களுக்கு முன்கூட்டியே டெபாசிட் செய்தால், மாதாந்திர பிரீமியத்தில் 10 சதவீத தள்ளுபடி இருக்கும். அதாவது நீங்கள் மாதம் ரூ. 3000 சேமித்தால் 6 மாதங்களுக்காக டெபாசிட் தொகையை முன்கூட்டியே கட்டிவிட்டால் அப்போது 10 சதவீத தள்ளுப்படியும் ரூ.2900 கட்டினால் போதும். 

இந்த செய்தியையும் படிங்க…

Post office scheme:ஆண் குழந்தைகளுக்காக  அஞ்சல் துறையில் செல்வ மகன் சேமிப்பு திட்டம்..!! 

இதுப்போன்ற எண்ணற்ற சலுகைகள் மற்றும் லாபம் தரக்கூடிய முதலீடு திட்டமாக போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் உள்ளது.

Leave a Comment