“3 ஆண்டு பட்டப்படிப்பில் 2 பிரிவுகளில் படித்தால்- ஆசிரியர் பணி வழங்கப்படாது”..!!
மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர் இளநிலை பட்டப்படிப்பில் 2 ஆண்டுகள் பி.எஸ்சி (B.Sc.,)(கணிதம்) படித்தார். மூன்றாவது ஆண்டில் பி.ஏ.(B.A.,) (வரலாறு) படித்தார். இவருக்கு 1995ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.(B.A.,) (வரலாறு) பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்பின் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எட்(B.Ed.,). முடித்தார்.
இச்சூழலில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் பணித் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்குச் சென்றுள்ளார். ஆனால் மூன்று ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில் முதல் இரண்டு ஆண்டுகள் ஒரு பிரிவிலும் இறுதி ஆண்டில் மற்றொரு பிரிவிலும் படித்ததால் அவருக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
7th Std Bridge Course Worksheet and Key Answers (All Subjects):
🔴🔴 7th Std Tamil Bridge Course Worksheet and Key Answers 2021|
🔴🔴 7th Std English Bridge Course Worksheet and Key Answers 2021.
🔴🔴 7th Std Maths Bridge Course Worksheet and Key Answers 2021.
🔴🔴 7th Std Science Bridge Course Worksheet and Key Answer 2021.
🔴🔴 7th Std Social Science Bridge Course Worksheet and Key Answers 2021|
இதனை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் பாபு மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதையடுத்து நீதிபதிகள், “மனுதாரர் மூன்று ஆண்டில் இரண்டு பிரிவுகளை படித்துள்ளார். இது ஆசிரியர் பணிக்குத் தகுதியாகக் கருத முடியாது. தனி நீதிபதி உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது” என தெரிவித்தனர்.