27 மாவட்டங்களுக்கு இடையே ஜூன் 28 முதல் தொலைதூர பேருந்துகள் இயக்கம்-போக்குவரத்து துறை..!!

 27 மாவட்டங்களுக்கு இடையே ஜூன் 28 முதல் தொலைதூர பேருந்துகள் இயக்கம்-போக்குவரத்து துறை..!!

27 மாவட்டங்களுக்கு இடையே வரும் 28-ஆம் தேதி முதல் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது.

இந்த செய்தியையும் படிங்க….

BREAKING: PLUS TWO வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறை: ஸ்டாலின் வெளியிட்டார்..!!  

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துவருவதையொட்டி பல்வேறு விதமான தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதில், 27 மாவட்டங்களுக்கு இடையே வரும் 28ஆம் தேதிமுதல் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை தற்போது போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், அரசு விரைவுப் பேருந்துகள், சார்புடைய போக்குவரத்துக் கழகங்கள் 50% பயணிகளுடன் 28-ஆம் தேதி காலை 6 மணிமுதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திற்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் போக்குவரத்துத் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க….

 BREAKING: யாருக்கெல்லாம் PLUS TWO மறு தேர்வு: அமைச்சர் விளக்கம்..!! 

ஏற்கெனவே 4 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், 23 மாவட்டங்களுக்கு சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment