26-04-2021- முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுபாடுகள் என்ன..?? - Tamil Crowd (Health Care)

26-04-2021- முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுபாடுகள் என்ன..??

 26-04-2021- முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுபாடுகள் என்ன..??

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

இந்த செய்தியையும் படிங்க….

 புதிய அறிகுறிகளுடன் கொரோனா:அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை..!! 

அதன்படி, வருகிற 26ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல், 

  • அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • அதே போன்று, பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி வழங்கப்படவில்லை.
  • மளிகை, காய்கறிக்கடைகள் மற்றும் இதர அத்தியாவசிய கடைகள் உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. 
  • எனினும் வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • தனியாக செயல்படுகின்ற மளிகை உள்ளிட்ட பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள், குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. 
  • இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில், அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இது மட்டுமல்லாமல், அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. 
  • உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. 
  • விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும் என்றும், விடுதி உணவு கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment