RTE – மெட்ரிக், CBSE பள்ளிகளில் RTE மூலம் மாணவர்
சேர்க்கை..!!
2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் மெட்ரிக், CBSE தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20 முதல் மே 18 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான http://rte.tnschools.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. அத்துடன், மாணவர் சேர்க்கை குறித்து பெற்றோர்கள் அறியும் வகையில், தனியார் பள்ளிகளின் நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும் எனவும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
14 வயது வரையில் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 % இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பொருளாதாரவாரியாக பின்தங்கிய மாணவர்கள் இலவச கல்வி பெற்று வருகிறார்கள். இவர்களுக்கான படிப்புச் செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கிறது.
இந்த 25% இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெறாத வகையைில், தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு, வரும் 20 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை https://t.co/eqU9OW3P9k என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், மாணவர் சேர்க்கை பற்றி பெற்றோர் அறியும் வகையில், தனியார் பள்ளிகளின் நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.