(2022-23) தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு -பள்ளிக்
கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு..!!
தமிழகத்தில், 2022-2023 ஆம் கல்வி ஆண்டு வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. அதன்படி,
10 ஆம் வகுப்பு:
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே மாதம் 6 ஆம் தேதி முதல் மே மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும்
11 ஆம் வகுப்பு:
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 மாதம் ஆம் தேதி தொடங்கி மே மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெறும்
12 ஆம் வகுப்பு :
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28 ஆம் தேதி முடிவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
1-9 ஆம் வகுப்பு :
இதற்கிடையே, 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 13 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மே மாதம் 13 ஆம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதாவது 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே மாதம் 13 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இன்று, தமிழகத்தில், 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டு, வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி முதல் தொடங்கும் என, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு – வகுப்புகள் தொடங்கும்.
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 24 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்றும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.