2021-22 கல்வி ஆண்டுக்கான அரசுப்பள்ளி தரம் உயர்வு பட்டியல் அனுப்ப- முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு.! - Tamil Crowd (Health Care)

2021-22 கல்வி ஆண்டுக்கான அரசுப்பள்ளி தரம் உயர்வு பட்டியல் அனுப்ப- முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு.!

 2021-22 கல்வி ஆண்டுக்கான அரசுப்பள்ளி தரம் உயர்வு பட்டியல் அனுப்ப- முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு.!

பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது : 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் ஆண்டு வரைவுத் திட்டத்துக்காக ( 2021-22 ) , தரம் உயர்த்த வேண்டிய அரசுப் பள்ளிகளின் பட்டியல் தேவைப்படுகிறது. எனவே , தர உயர்வுக்குத் தகுதியான நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலைத் தயாரித்து , இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பிவைக்க வேண்டும். 

இந்த செய்தியையும் படிங்க…

புதிய கல்வி ஆண்டுக்கான RTE- மாணவர்கள் சேர்க்கை எப்போது?

மேலும் , தேர்வான பள்ளிகளில் , நிர்ணயிக்கப்பட்ட நிலப்பரப்பு உள்ளிட்ட தகுதிகளைப் பரிசீலித்து , கருத்துரு அடங்கிய அறிக்கையையும் காலதாமதமின்றி அனுப்பிவைக்க வேண்டும் . இதில் , எவ்விதப் புகார்களுக்கும் இடம் அளிக்கக் கூடாது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment