2021-22ம் கல்வி ஆண்டுக்கான இலவச பாடநூல்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்..!! - Tamil Crowd (Health Care)

2021-22ம் கல்வி ஆண்டுக்கான இலவச பாடநூல்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்..!!

2021-22ம் கல்வி ஆண்டுக்கான இலவச பாடநூல்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்..!!

2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடநூல்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

இந்த செய்தியும் படிங்க…

“அரசுப்பள்ளிகளில்: ஆங்கில பயிற்சியை மேம்படுத்துங்கள்” – கமல்ஹாசன்..!!  

CORONA  இரண்டாவது அலை பரவலானது தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் தற்போது திறக்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.மேலும்,கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர மாற்று வசதிகள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்றும் கூறினார்.

அந்த வகையில்,2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான புதிய காணொலிகள் கல்வித் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டும் வருகிறது.இந்த காணொலிகளில் தொடக்க கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரையிலான பாடங்கள் இடம்பெறும்.

இதற்கான பாடத்திட்டங்கள் கல்வி தொலைக்காட்சி படப்பிடிப்பு தளங்களில் தயாரிக்கப்படும்.இந்த காணொலிகள் கடந்த ஆண்டைப்போல் 10-க்கும் மேற்பட்ட தனியார் தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில்,கல்வி தொலைக்காட்சி மூலமாக புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.

இந்த செய்தியும் படிங்க… 

அரசு பள்ளிகளில் -கல்வி  தரத்தை மேலும் உயர்த்த அரசு ஆலோசனை..!!  

இந்நிகழ்ச்சியில்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பிற உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

Leave a Comment