( 2020-21) அரசு ஊழியர்களின் DA, DR நிறுத்தி வைப்பு:ரூ.34,402 கோடி மிச்சம்-நிதி அமைச்சகம்..!!

( 2020-21) அரசு ஊழியர்களின் DA, DR நிறுத்தி வைப்பு:ரூ.34,402 கோடி மிச்சம்-நிதி அமைச்சகம்..!!

ரூ.34,402 கோடி மிச்சம்-நிதி அமைச்சகம்:

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் DA மற்றும் DR ஐ மூன்று தவணைகளாக அரசு நிலுவையில் வைத்ததன் மூலம் மத்திய அரசு ரூ.34,402 கோடியை சேமித்துள்ளதாக நிதி அமைச்சகம் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

 NEET  தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் – நீட்டிப்பு..!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு:

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 முதல் செலுத்த வேண்டிய DA மற்றும் DR-ன் மூன்று தவணைகளை நிறுத்தி வைத்திருந்தது. நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாகவும், ஊழியர்களின் DA நிறுத்துவதன் மூலம் அரசுக்கு நிதியின் மீதான அழுத்தம் குறையும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் சம்பளம்30% குறைப்பு:

 கொரோனா தொற்றுநோய் காரணமாக உள்ள நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் சம்பளத்தை 2020 ஏப்ரல் 1 முதல், 2021 மார்ச் 31ம் தேதி வரை 12 மாதங்களுக்கு மாத ஊதியத்தில் 30% குறைக்கப்படுவதாகவும் நிதி அமைச்சர் அறிவித்தார்.

இந்த செய்தியையும் படிங்க…

 GATE தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு- மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு..!!

 மேலும், துணை நிலை ஊழியர்களுக்கு அவர்களின் ஊதியம் குறைப்பு மற்றும் DA நிலுவையில் வைத்தால் போன்ற எதுவும் செய்யப்பட வில்லை. அவர்கள் அனைவருக்கும், DA உயர்வு மட்டும் 01.01.2020 முதல் 30.06.2021 வரை நிறுத்தப்பட்டது என்றும் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று கூடுதல் தவணை DA மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு DR, 1 ஜனவரி 2020 ல் 17% ஆக இருந்த நிலையில் தற்போது DA 28% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் DA  மற்றும் DR  ஜூன் 30ம் தேதி வரை 18 மாத காலமாக நிலுவையில் வைத்திருந்ததால் மத்திய அரசு ரூ.34,402 கோடியை சேமித்துள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

Leave a Comment