‘2 Deoxy-D-Glucose Oral,மருந்தை யாருக்கு கொடுக்கலாம்: DRDO..!!
(DEFENCE R&D ORGANISATION) :
தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2DG COVID மருந்தை எங்கு வாங்கலாம்; இதை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என்ற தகவலை டி.ஆர்.டி.ஓ., (DEFENCE R&D ORGANISATION) வெளியிட்டுள்ளது.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (DRDO) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளதாவது:DRDO அமைப்பின் ஆய்வகமான Institute Of Nuclear Medicine & Allied Science (INMAS), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து, 2Deoxy-D-Glucose( 2DG) மருந்தை தயாரித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
இந்தியாவில் COVID- அடுத்த அலையை கணிக்க இயலாது-WHO..!!
இந்த 2DG மருந்தை அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள கடந்த 1ம் தேதி DCGI அனுமதி அளித்தது. இந்த மருந்து பவுடர் வடிவில் இருப்பதால், தண்ணீரில் கலந்து குடிக்க முடியும். இந்த மருந்து உடலில் சென்று வைரசால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டு ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது.
இதை மருத்துவரின் பரிந்துரை இன்றி வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.மிதமான அளவில் கோவிட் COVID தொற்று பாதித்தவர்களுக்கு அதிகபட்சமாக 10 நாட்கள் வரை 2-DG மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். இந்த மருந்தை எடுத்துக்கொளள விரும்பும் நோயாளிகள் தங்களின் உதவியாளர்கள் வாயிலாக மருத்துவமனையை டாக்டர் ரெட்டிஸ் லேபை அணுக வலியுறுத்த வேண்டும்.
2DG@drreddys.com இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், தீவிர இருதய நோய்கள், ஹெபாடிடிஸ் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு போன்ற இணை நோய் கொண்டவர்களுக்கு இந்த மருந்தை கொடுத்து சோதிக்கப்படாததால், அவர்களுக்கு இம்மருந்தை பரிந்துரைப்பதில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும்.
இந்த செய்தியையும் படிங்க…
கருப்பு பூஞ்சை(Block Fungi) பற்றிய- விழிப்புணர்வு தேவை!!
கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்கக் கூடாது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.2DG மருந்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் ஆகியோர் கூட்டாக கடந்த மே 17ல் வெளியிட்டனர்.
அப்போது, ‘2DG COVID மருந்தைத் தண்ணீரில் கலந்து குடிக்கும் லேசான அறிகுறி கொண்ட நோயாளிகள், 2 முதல் 2.5 நாட்களில் குணமடைய வாய்ப்புள்ளது. மருந்தை உட்கொள்வதன் வாயிலாக, ஆக்சிஜன் தேவையை 40 சதவீதம் வரை குறைக்கலாம்’ என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.