2 நாட்கள் விடுமுறை :பிப்ரவரி 18, 19-ம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

 2 நாட்கள் விடுமுறை :பிப்ரவரி 18, 19-ம் தேதிகளில்


 பள்ளிகளுக்கு விடுமுறை..!! 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை (18,19) அறிவித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.

மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு (26-01-2022)குடியரசு தினத்தன்று வெளியானது. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்ததிலிருந்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் என்பதால் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்களும்  இத்தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு:

இந்தநிலையில், வாக்குப் பதிவு நாளான பிப்ரவரி 19-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பில், ‘வரும் 19-02-2022 அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. 50% மேல் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் இருப்பின் அப்பள்ளிகளுக்கு 18-02-2022 அன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment