18+ நண்பர்களே.. கொரோனா தடுப்பூசி-‘CoWIN’ ஆப்-ல் ரெஜிஸ்டர் செய்வது எப்படி தெரியுமா?
18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இன்று (ஏப்.28) முதல் ரெஜிஸ்டர் செய்யலாம். ஆனால், எப்படி பதிவு செய்வது என்பது குறித்து பலருக்கும் குழப்பம் உள்ளது. உங்களுக்கு தேவையான எளிதான ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை இங்கே.
இந்த செய்தியையும் படிங்க…
SBI Alert: கொரோனா பெயரில் கொள்ளை- பணம் செலுத்தும் முன் கவனமாக இருங்க!
நாட்டில் கொரோனா இரண்டாவது அலை உக்கிரமாக வீசிக் கொண்டிருக்கும் சூழலில், கொரோனா தடுப்பூசி துரித கதியில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மே 1ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால், தடுப்பூசி போட வேண்டுமெனில், ‘cowin’ ஆப்-ல் ரெஜிஸ்டர் செய்வது கட்டாயம். ரெஜிஸ்டர் பண்ணாமல் சென்று தலை கீழ் நின்றாலும் தடுப்பூசி கிடைக்காது. இன்று மாலை 4 மணி முதல் ரெஜிஸ்டர் பண்ணலாம் என்று மத்திய அரசு தற்போது அறிவித்திருக்கிறது. இந்த கோவின் ஆப்-ல் எப்படி ரெஜிஸ்டர் செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்டெப் 1: cowin.gov.in தளத்தை Log on செய்து உங்கள் மொபைல் எண்ணை பதிவிடவும்
ஸ்டெப் 2: உங்கள் மொபைலுக்கு OTP எண் அனுப்பப்படும்.
ஸ்டெப் 3: அந்த OTP எண்ணை பதிவு செய்து ‘Verify’ பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 4: OTP எண் சரிபார்க்கப்பட்டு பிறகு, தடுப்பூசி ரெஜிஸ்டர் பக்கம் ஓபன் ஆகும்
ஸ்டெப் 5: அதில் photo ID proof உட்பட கேட்கப்பட்டிருக்கும் அனைத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.
பிறகு, கீழ் வலதுபுறத்தில் உள்ள Register பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 6: Register முடிந்ததும், உங்களுக்கு கணக்கு விவரங்கள் காண்பிக்கப்படும். அந்த கணக்கு விவரங்கள் பக்கத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நேரத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
ஸ்டெப் 7: நீங்கள் இன்னும் சிலரை சேர்க்க விரும்பினால், கீழே வலது பக்கத்தில் Add More பட்டனை க்ளிக் செய்து அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும்.
ஆரோக்யா சேது ஆப் மூலம் பதிவு செய்வது எப்படி?
ஸ்டெப் 1: ஆரோக்யா சேது ஆப்-ஐ ஓபன் செய்து Home Screen-ல் இருக்கும் CoWIN tab-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 2: ‘Vaccination Registration’ என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடவும். பிறகு நீங்கள் ரிஸீவ் செய்யும் OTP எண்ணை பதிவிட்டு சரிபார்க்கவும்.
ஸ்டெப் 3: ‘Register for Vaccination’ பக்கத்தில், புகைப்பட அடையாளச் சான்று, பெயர், பாலினம் மற்றும் பிறந்த ஆண்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவிடவும். பிறகு, ‘Register’ என்பதைக் கிளிக் செய்க.
ஸ்டெப் 4: நீங்கள் ரெஜிஸ்டர் பிறகு, தடுப்பூசி செலுத்தும் நேரத்தை நீங்களே தேர்வு செய்வதற்கான ஆப்ஷன் பெறுவீர்கள். அதில், உங்கள் விருப்பமான நேரத்தை தேர்வு செய்யலாம்.
இந்த செய்தியையும் படிங்க…
வரும் சனி, ஞாயிறு- 2 நாட்களும் முழு ஊரடங்கா..??
ஸ்டெப் 5: உங்கள் Pin Code சேர்த்து, search செய்தால், உங்கள் ஏரியாவில் இருக்கும் கொரோனா தடுப்பூசி மையங்கள் தோன்றும்.
ஸ்டெப் 6: இறுதியாக, தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுத்து ‘Confirm’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.