165 இடங்களை அள்ளும் திமுக.. ஸ்டாலின்தான் முதல்வர்-அதிமுகவிற்கு 40.. இந்தியா அஹெட் கணிப்பு..!!
தமிழகத்தில் 165 இடங்களில் வென்று திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று இந்தியா அஹெட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. ரிபப்ளிக் தொடங்கி இந்தியா டுடே, ஏபிபி, சி வோட்டர் வரை பல நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனா பாதுகாப்பு காரணங்களால், -தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு..!!
இதில் தமிழகம் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது. பெரும்பாலான கணிப்புகள் திமுக கூட்டணி அறுதிபெரும்பான்மை பெற்று வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளது. இதில் இந்தியா அஹெட் செய்தி நிறுவனமும் தமிழக சட்டசபை தேர்தல் குறித்த கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியா அஹெட் செய்தி நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கணிப்பின்படி தமிழகத்தில் திமுக கூட்டணி 165 இடங்களை வெல்லும், அதிமுக கூட்டணி 40 இடங்களை வெல்லும், மநீம 1 இடத்தில வெல்லும், அமமுக 1 இடத்தில் வெல்லும்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க 234 இடங்களில் 118 இடங்கள் தேவை என்ற நிலையில் 165 இடங்களை வென்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவார் என்று இந்தியா அஹெட் செய்தி நிறுவனம் கணித்துள்ளது.