135 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு பலி- தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ்..!! - Tamil Crowd (Health Care)

135 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு பலி- தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ்..!!

 135 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு பலி.. உ.பி தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ்..!!

தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட 135 ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கொரோனாவுக்கு பலியானது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உ.பி. மாநில தேர்தல் ஆணையத்துக்கு அலகாபாத் ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

வரும் சனி, ஞாயிறு- 2 நாட்களும் முழு ஊரடங்கா..?? 

இதுதொடர்பாக செய்தித் தாளில் வந்த செய்தியின் அடிப்படையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்திருந்த நிலையில் தற்போது அலகாபாத் ஹைகோர்ட்டிடம் உ.பி. தேர்தல் ஆணையம் சிக்கியுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் தர தேர்தல் ஆணையமும் சரி, உ.பி. காவல்துறையும் சரி தவறி விட்டதாக அலகாபாத் ஹைகோர்ட் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

கோவிட் புரோட்டோகாலை உரிய முறையில் கடைப்பிடிக்காத குற்றத்திற்காக ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தனது நோட்டீஸில் அலகாபாத் ஹைகோர்ட் கேட்டுள்ளது. இந்த வழக்கு மே 3ம் தேதி விசாரணைக்கு வருகிறது. தற்போது உ.பியில் பஞ்சாயத்து தேர்தல் நடந்து வருகிறது. இந்தத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று பலரும் கேட்டுக் கொண்ட போதிலும் கூட அதை உ.பி .தேர்தல் ஆணையமும் மாநில அரசும் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை என்பது நினைவிருக்கலாம்.

இந்த செய்தியையும் படிங்க…

 கொரோனா: தமிழ்நாட்டில் அறிகுறி உள்ளவர்களை பரிசோதிக்க -புதிய வழிமுறை..!! 

டெல்லியைப் போலவே உ.பியிலும் கொரோனா தலைவிரித்தாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment