12(+2)-வினாத்தாள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு..!!
கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் வருகிற மே 3ம் தேதி தொடங்க இருந்து பிளஸ்2 பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க….
இதனிடையே பிளஸ்2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்களை அரசு தேர்வுத்துறை ஏற்கனவே தயாரித்து வைத்துள்ளது. இவற்றை அந்தந்த மாவட்டங்களுக்கு தேவையான எண்ணிக்கை பண்டல்களை பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைத்துள்ளனர். அவை கல்வி மாவட்ட அளவில் பாதுகாப்புடன் வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.