12 IAS அதிகாரிகள் – பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு..!!
தமிழகத்தில் 12 IAS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு-தமிழக அரசு அறிவிப்பு..!!
அதாவது,தர்மபுரி, மதுரை, சேலம் மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 12 ஐஏஏஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணைச் செயலராக சந்திரசேகர் சகாமுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு இணைச் செயலராக அமிர்தஜோதி நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர், ஜக்மோகன் சிங் ராஜூ டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு கூடுதல் தலைமை செயலாளராக நியமனம்.
சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலாளராக இருந்த மதுமதி ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையராக நியமனம்.
ஷஜான் சிங் ஆர். சவான், ரேஷன் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் தற்போது மீன்வளத்துறையின் கூடுதல் ஆணையராக நியமனம்.
சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தோட்டக்கலைத்துறை மற்றும் பயிர்கள் வளர்ச்சித்துறை இயக்குனராக நியமனம்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியராக உள்ள கார்த்திகா, உயர்கல்வித்துறை இணை செயலாளராக நியமனம்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கரும்பு வளர்ச்சி துறை கூடுதல் ஆணையராக நியமனம்.
பவர் பைனான்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் முதன்மை செயலாளர் சந்திரகாந்த் பி காம்பாலே,தற்போது புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் முதன்மை செயலாளராக நியமனம்.
தமிழக சிவில் சப்ளை துறை ஆணையராக இருந்த சுதா தேவி, தமிழ்நாடு நீர்நிலை வளர்ச்சி துறை இயக்குனராக நியமனம்
இந்த செய்தியையும் படிங்க…
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற மத்திய அரசு முன்வர வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!!