12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து -ஆலோசனை! - Tamil Crowd (Health Care)

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து -ஆலோசனை!

 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து -ஆலோசனை!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த முடியுமா? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு நான்காயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், சென்னையில் மட்டும் தொற்று பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை. 

இதனை அடுத்து, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், மே 3-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை, பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுத்தேர்வை, திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது ஓரிரு வாரங்கள் தள்ளி வைக்கலாமா?என்பது குறித்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்த செய்தியையும் படிங்க…

ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு -நீதிமன்றம் உத்தரவு . 

 காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Comment