12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்..!!
சிபிஎஸ்இ(CBSC) போன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்: ராமதாஸ்.
சிபிஎஸ்இ(CBSC) போன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளைக் குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திவைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க…
வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு: முதல்வர் அறிவிப்பு..!!
கரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ(CBSC) 10-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்வதாகவும், 12-ம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய அரசு (ஏப்.14) அறிவித்தது.
தமிழகத்தில் உள்ள 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகளை ஏற்கெனவே ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தில் மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு மே 5ஆம் தேதி முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இது தொடர்பாக, ராமதாஸ் (ஏப்.15) தன் ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ(CBSC) பாடத்திட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை. கரோனா காலத்தில் மாணவர் நலன் கருதி எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை இதுவாகும்!
சிபிஎஸ்இ(CBSC) 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் பாமகதான் குரல் கொடுத்தது. அந்த வகையில், மத்திய அரசின் நடவடிக்கை பாமகவுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது!
இந்த செய்தியையும் படிங்க…
இனி தங்கம் வாங்க புது கட்டுப்பாடு- மத்திய அரசு அதிரடி..!!
தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்; குறைந்தபட்சம் சிபிஎஸ்இ(CBSC) போன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திவைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!” எனப் பதிவிட்டுள்ளார்.