12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்..?? - Tamil Crowd (Health Care)

12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்..??

 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்..??

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

முதல்வர் எடப்பாடி பழனிசாமி -மருத்துவமனையில் அனுமதி..!! 

இதுதொடர்பாக, மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுகள் துறை இயக்குநர் உஷாராணி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மே மாதம் நடைபெற இருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு அட்டவணை, தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்முறைத் தேர்வுகள், தேர்வுத்துறை வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெறும் என்றும், செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை 24-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment