12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏற்படவிருக்கும் -முக்கிய மாற்றம்…!!!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்தலாமா? தள்ளி வைக்கலாமா? என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்துகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா பரவ ஆரம்பித்தது முதல் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்ற வருடம் நடக்கவிருந்த பள்ளி, கல்லூரி தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டன.
இந்த செய்தியையும் படிங்க…
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து -ஆலோசனை! |
இந்நிலையில் இந்த வருடமும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 11ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி என சில நாட்களுக்கு முன் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இந்த செய்தியையும் படிங்க…
2 பொதுத்தேர்வை மே 3ஆம் தேதி திட்டமிட்டப்படி நடத்துவதா, ஒத்திவைப்பதா? |
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே 3 ஆம் தேதி பொதுத்தேர்வுகள் நடைபெறவிருந்தது. இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அச்சம் நிலவியது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருப்பதால் ஆசிரியர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதா? தள்ளிவைப்பதா? என பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை நடத்துகிறது. இதன்மூலம் தேர்வுகள் தள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Epdiyo exam iruku . Atha yen postpone panikitu apadiye vachu vidunga