12 ஆம் வகுப்பு பொதுதேர்வுகளை ரத்து செய்யவேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை..!! - Tamil Crowd (Health Care)

12 ஆம் வகுப்பு பொதுதேர்வுகளை ரத்து செய்யவேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை..!!

 12 ஆம் வகுப்பு பொதுதேர்வுகளை ரத்து செய்யவேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை..!!

கொரோனா வைரஸ் முன்பை விட மிக வேகமாக பரவி வரும் நிலையில் மாணவ மாணவிகளின் நலன் கருதி 12 ஆம் வகுப்பு பொதுதேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க…

50 சதவீத இருக்கைகளுக்கே -வகுப்பறைகளில் அனுமதி…!!! 

இது தொடர்பான அறிக்கையில், கடந்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் கொரோனா பரவல் தொடக்க நிலையில் இருந்த போதே மாணவர்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை சுட்டிகாட்டியுள்ளார். 

இந்த செய்தியையும் படிங்க…

12 பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி -மே 3ஆம் தேதி முதல் நடத்த முடிவு. 

கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில்,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். ஒருவேளை தேர்வு எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் பொதுதேர்வுகளை ஆன்லைனில் நடத்தவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment