+1,+2-ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்கப்படுமா? - Tamil Crowd (Health Care)

+1,+2-ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்கப்படுமா?

 வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாள் +2  தேர்வுகள் தொடக்கம்:  ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்கப்படுமா?

தமிழகத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடப்பதாகவும், வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதனால், தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.

ஆசிரியர்கள் கருத்து :

தேர்தல் பணிகளில் பள்ளி ஆசிரியர்கள் வழக்கம்போல் ஈடுபடுத்தப்பட உள்ளது. ஆனால், ப்ளஸ்-1, ப்ளஸ்-2 வகுப்பு ஆசிரியர்கள், தற்போதுதான் ப்ளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு முழுவீச்சில் பாடம் எடுத்து வருகிறோம். எங்களையும் தற்போது தேர்தல் ஆணையத்தின் பயிற்சிக்கு அழைக்க பட்டியல் எடுத்துள்ளனர்.

ஏற்கெனவே, ப்ளஸ்-டூ மாணவர்களுக்கு தடையின்றி பாடம் நடத்தவும், கரோனா ஊரடங்கு விடுமுறையை ஈடுகட்டவும் சனிக்கிழமையும் பள்ளிகள் நடக்கிறது. தற்போது தேர்தல் பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை நடந்தால் ஆசிரியர்கள் ஒய்வே இல்லாமல் தேர்வுகள் முடியும் வரை பணிபுரிய வேண்டிய இருக்கும்.

கரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால், 9, 10 மற்றும் ப்ளஸ்-1 வகுப்புகளுக்கான இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால், ப்ளஸ்-டூ தேர்வு மட்டும் மே 3ம் தேதி தொடங்க உள்ளது. அதனால், அவர்கள் ப்ளஸ்-2 தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் பணியில் கவனம் சிதறவும், தோய்வும் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 2ம் தேதிக்கு மறுநாள் 3ம் தேதி ப்ளஸ்-2 தேர்வு நடக்க உள்ளது.

வாக்கு எண்ணிக்கை சில தொகுதிகளில் நள்ளிரவு வரை நடக்கும். சில சமயம் மறுநாள் காலை வரை கூட நடக்கும். அதுவரை வாக்கு எண்ணிக்க மையப்பணிகளுக்கு செல்லும் ப்ளஸ்-1, ப்ளஸ்-2 ஆசிரியர்கள் அங்கு இருந்தாக வேண்டும். அதனால், தேர்தல் பணிகளில் ப்ளஸ்-1, ப்ளஸ்-2 வகுப்பு ஆசிரியர்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும், ” என்றனர்.

Leave a Comment