12ஆம் வகுப்பு தேர்வு குறித்து -நாளை முக்கிய ஆலோசனை..!! - Tamil Crowd (Health Care)

12ஆம் வகுப்பு தேர்வு குறித்து -நாளை முக்கிய ஆலோசனை..!!

 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து -நாளை முக்கிய ஆலோசனை..!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என அரசு உறுதிபட கூறி இருக்கும் நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சற்றுமுன் வெளியான தகவலின்படி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அதேபோல் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வது அல்லது ஒத்தி வைப்பது குறித்து நாளை தலைமைச் செயலாளர் முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் அதிரடி முடிவு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் நாளை தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment