12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு - Tamil Crowd (Health Care)

12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு

 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான CBSE தேர்வுகள் ஒத்திவைப்பு

ரம்ஜான் பண்டிகையின்போது நடக்க இருப்பதாக அறிவிக்கப் பட்டிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான CBSE தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக CBSE நிர்வாகம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது

ரம்ஜான் பண்டிகை வரும் மே மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே மே 13 மற்றும் 15ம் தேதிகளில் CBSE தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

தேர்வுகள் ஒத்திவைப்பு:

இதனை அடுத்து மே 15ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு மே 21ம் தேதிக்கு மே 13ஆம் தேதி நடைபெற இருந்த பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல் தேர்வு ஜூன் 8ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை CBSE நிர்வாகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment