11 நிமிட பயணம் தான்: ஒரு பயண டிக்கெட்டின் விலை ரூ.205 கோடி..!!

 11 நிமிட பயணம் தான்: ஒரு பயண டிக்கெட்டின் விலை ரூ.205 கோடி..!! 

AMAZON நிறுவனதலைவர்ஜெஃப்பெஸாஸ்உடன் விண்வெளிக்குபயணிப்பதற்கான டிக்கெட் 205 கோடிரூபாய்க்குஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

JULY 20ஆம் தேதி பெஸாஸ் மற்றும் அவரது சகோதர் விண்வெளிக்கு செல்ல இருக்கின்றனர். பெஸாஸின் ‘Blue Origin’ நிறுவனம் விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்ப உள்ளது. அவருடன் யார் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான டிக்கெட் ஏலம் விடப்பட்டது.

பயண டிக்கெட்டுக்கான ஏலம் 4.8 மில்லியன் அமெரிக்க டாலர்களில் ஆரம்பமானது . சுமார் 159 நாடுகளை சேர்ந்த 7000 க்கும் அதிகமானோர் இதில் பங்கேற்றனர் . இறுதியல் 28 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு பயண டிக்கெட் ஏலத்தில் எடுக்கப்பட்டது.

இந்த செய்தியையும் படிங்க… 

KV(KENDRIYA VIDYALAYA SANGATHAN)- மாணவர் சேர்க்கை கால அட்டவணை JUNE-23 வெளியீடு..!! 

பயண டிக்கெட்டை ஏலத்தில் வாங்கியுள்ள நபரும் பெஸாஸ் மற்றும் அவரது சகோதரருடன் பயணிப்பார். அவர் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. Blue Origin நிறுவனத்தின் New Shepard ராக்கெட்டில் மூவரும் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்த பயணம் வெறும் 11 நிமிடங்கள் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 நிமிட பயணத்திற்கு ஒருவர் 205 கோடி செலவு செய்துள்ளார்.

Leave a Comment