10th Pass; ரூ.19,900/- சம்பளத்தில் இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு..!! - Tamil Crowd (Health Care)

10th Pass; ரூ.19,900/- சம்பளத்தில் இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு..!!

 10th Pass;  ரூ.19,900/- சம்பளத்தில் இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு..!!

சென்னையில் செயல்படும் இந்திய இராணுவத்தின் (Embarkation) தலைமையகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் MTS, LDC & Clerk பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

ராணுவ வேலைவாய்ப்பு :

இந்திய இராணுவத்தின் (Embarkation) தலைமையகத்தில் MTS, LDC & Clerk பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வயது வரம்பு:

விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்்.

கல்வித்தகுதி :

Lower Division Clerk – 12th pass; தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.

Tally Clerk – 12th pass; 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Multitasking Staff (Messenger) – 10th pass; 6 மாத காலம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Multitasking Staff (Safaiwala) – 10th pass;  6 மாத காலம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.19,900/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் Written Exam, Practical Exam தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 22.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி :

The Commandant, 

Embarkation Headquarters,

Fort St George, 

Chennai-600009.

Leave a Comment