10th மதிப்பெண் சான்றிதழ்: அமைச்சர் விளக்கம்..!! - Tamil Crowd (Health Care)

10th மதிப்பெண் சான்றிதழ்: அமைச்சர் விளக்கம்..!!

 10th மதிப்பெண் சான்றிதழ்: அமைச்சர் விளக்கம்..!! 

10th பொதுத்தேர்வு ரத்து என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே இந்த நிலையில் 10th மதிப்பெண் பட்டியலில் 5 பாடங்களுக்கு தனித்தனியாக மதிப்பெண் பதிவு செய்வதற்கு பதிலாக மொத்தத்தில் ‘All Pass’ தேர்ச்சி என்று மட்டும் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும் இதற்கான மாதிரி மதிப்பெண் சான்றிதழ் அரசுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளதாகவும் அரசின் அனுமதி பெற்றவுடன், மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த செய்தியையும் படிங்க…

உயர் கல்வி மாணவர்கள் சேர்க்கை-  இந்த வாரத்தில் முடிவு தெரியும்: அமைச்சர் பேட்டி..!! 

இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் 10th மதிப்பெண் சான்றிதழ் ‘All Pass’ தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிடப்பட்டு வழங்க உள்ளோம் என்பதை உறுதி செய்துள்ளார். மேலும் இப்போதைக்கு 9th  மதிப்பெண் அடிப்படையில் Plus One சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து 10th மதிப்பெண் சான்றிதழில் All Pass தேர்ச்சி என்று மட்டும் தான் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் பின்னாளில் மாணவர்கள் 10th அடிப்படையாக கொண்டு பணிக்கு சேரும்போது இந்த மதிப்பெண் சான்றிதழால் சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Leave a Comment