10,12 மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை தெரிவிப்பு-
திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது..!!
திருப்புதல் தேர்வு:
கடந்த சில தினங்களாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஆனால், தேர்வுக்கு முன்னதாகவே 12-ம் வகுப்புக்கான உயிரியல், வணிகவியல், வணிகக் கணிதம் வினாத்தாள்கள் வலைதளங்ளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நாளை (16ம் தேதி) நடைபெறவுள்ள 12-ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வின் இயற்பியல் வினாத்தாளும் முன்கூட்டியே வலைதளங்களில் வெளியானதாக புகார் எழுந்துள்ளது.
குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்:
இதையடுத்து, சமூக வலைதளங்களில் வினாத்தாள் வெளியானது குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது:
இந்நிலையில், தொடர்ந்து வினாத்தாள்கள் வெளியாகி வரும் நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது.
பொதுத்தேர்வே முக்கியம்:
திருப்புதல் தேர்வு மதிப்பெண் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது, மாணவர்களை பொதுத்தேர்வு எழுத தயார் படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.