10,12 ஆம் வகுப்பு தேர்வு குறித்து –
அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்ததால் பொது தேர்வுக்கு தயார்ப்படுத்தும் விதமாக திருப்புதல் தேர்வு நடைபெற்றது. ஆனால் இந்த திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் இணையதளத்தில் முன்கூட்டியே வெளியானது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி விசாரணை மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வினாத்தாள்கள் வெளியானது என்பதை கண்டுபிடித்தது. இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு வருகிற 28-ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த தேர்வில் எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதற்காகவும், வினாத்தாள்கள் இணையதளத்தில் வெளியாவதைத் தடுப்பதற்காகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வில் இரண்டு வகை வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதாவது முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் இணையதளத்தில் வெளியானதால் 2 வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.