10,11,12 -மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு..!!

 10,11,12 -மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு..!!

கொரோனா தொற்று காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித கவலையும் இன்றி மனமகிழ்வுடன் பயமின்றி படித்து தேர்வெழுத வேண்டும். அவ்வாறு மனநிறைவுடன் தேர்வெழுதி தங்களது குறிக்கோளை அடைய வேண்டும் என்று கூறிய அமைச்சர், கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மார்ச் மாத இறுதிக்குள் பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெற்ற பிறகு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment