1,000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை கண்டெடுப்பு..!! - Tamil Crowd (Health Care)

1,000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை கண்டெடுப்பு..!!

 இஸ்ரேல்: 1,000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை கண்டெடுப்பு..!!

இஸ்ரேலில் 1000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை உடையாமல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இஸ்ரேல் நாட்டின் யவ்னே நகரில் நடந்த அகழாய்வின்போது கழிவுநீர் தொட்டியிலிருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள், 1000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டையை கண்டெடுத்துள்ளனர். இந்த முட்டை இத்தனை ஆண்டுகளாக உடையாமல் இருப்பது தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முட்டையின் ஓட்டை வைத்து அதன் பழமையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள், முட்டையின் அடிப்பகுதியில் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்த செய்தியையும் படிங்க…

வண்டலூர் :சிங்கத்துக்கு புதிய வகை கொரோனா தொற்று..!!  

 இது குறித்து தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், ”இது மிகவும் அரிதான கண்டுபிடிப்பு. தென்கிழக்கு ஆசியாவில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோழிகள் வளர்க்கப்பட்டன, ஆனால் அவை மனித உணவில் நீண்ட காலத்திற்கு பிறகே சேர்க்கப்பட்டது. அவை சேவல் சண்டை போன்ற பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன” என கூறினார்.

Leave a Comment