100 நாள் வேலை திட்டம்: 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பணி வழங்கிட வேண்டும்..!!
100 நாள் வேலை திட்டத்தில் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பணி தரக்கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியும் படிங்க…
வீட்டை விட்டு வெளியே செல்வோர் தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!!
நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்கள் இந்த CORONA காலத்தில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு பணிபுரிய வேண்டும் என்று தமிழக அரசு கருதினால் அது ஏற்புடையதே. ஆனால் நல்ல உடல் பலம் உள்ளவர்களைக் கூட 55 வயதை கடந்து இருந்தால் அவர்களுக்கு பணி தரக்கூடாது என்ற உத்தரவு ஏழை, எளிய மக்களுக்கு பெரும் சிரமத்தை தான் ஏற்படுத்தும். எனவே, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேலை தரக் கூடாது என்ற அரசின் உத்தரவை உடனடியாக திரும்ப பெற்று அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும்.
இந்த செய்தியும் படிங்க…
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய அரசு பரிசீலனை-அரசு ஊழியர்கள் நம்பிக்கை..!!