10, 12ம் வகுப்பு தனித்தேர்வு நடத்தப்படுமா.?- பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.! - Tamil Crowd (Health Care)

10, 12ம் வகுப்பு தனித்தேர்வு நடத்தப்படுமா.?- பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.!

 10, 12ம் வகுப்பு தனித்தேர்வு நடத்தப்படுமா.?- பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால், கடந்த ஆண்டைப் போல 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை. இது மாணவர்களுக்கான இறுதித் தேர்வு என்பதால், பொதுத்தேர்வு நடத்தியே ஆகவேண்டும் என திட்டமிட்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறை தேர்வை ஒத்திவைத்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

 நீட் தேர்வு ரத்து செய்யப்படும்-கனிமொழி எம்.பி. உறுதி..!! 

மாணவர்களின் நலன் கருதி தேர்வை எப்படி நடத்துவது? 10ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண்கள் வழங்குவது என்பது குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. இன்றும் இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கட்டாயமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமென தெரிவித்தார்.

இத்தகைய சூழலில், 10 மற்றும் 12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். 10 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு நிச்சயம் தேர்வு நடத்தப்படும். மாணவர்களுக்கான தேர்வு நடத்தும் போது அவர்களுக்கும் தேர்வு நடத்துவது பற்றி ஆலோசித்து வருகிறோம். 10ம் வகுப்பு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டிய தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Comment