10-06-2021: நெருப்பு வளைய சூரிய கிரகணம்- இந்த பகுதிகளில் பார்க்க முடியும்..??
சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. பொதுவாக அமாவாசைகளில் நிகழும் இந்த சூரிய கிரகணம், வெவ்வேறு வகையில் தோன்றும்.
இந்த செய்தியையும் படிங்க…
கருப்பு பூஞ்சை(BLOCK FUNGI) நோய் – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது: தமிழ்நாடு அரசு..!!
கடந்த 2019, 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளுமே இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிகழ்ந்தது. நெருப்பு வளையம் சூரிய கிரகணம் நாளை மதியம் 1.42 மணிக்கு தொடங்கி மாலை 6.41 மணி வரை நிகழ உள்ளது.
முழு நெருப்பு வளைய சூரிய கிரகணம் 3 நிமிடம் 51 நொடி தெரியவுள்ளது. இந்த நிகழ்வை இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளில் பார்க்க முடியும் என்றும் வேறு எந்த இடத்திலும் பார்க்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவின் சில பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணமாக தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
DO YOU KNOW WHY BACK PAIN( முதுகு வலி) OCCURS..??
இந்த சூரிய கிரகணத்தை எக்காரணத்தை கொண்டும் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்றும் அதற்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக சூரிய கண்ணாடிகளைப் பயன்படுத்தி மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.