10 ஆம் வகுப்பு- மதிப்பெண்-அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவிப்பு..!!
10 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்டெர்னல் மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெறுவார்கள் என்று அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 பொதுத்தேர்வை ரத்து செய்வதா..? அல்லது ஒத்திவைப்பதா..? என்பது குறித்து இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், பள்ளி மற்றும் உயர் கல்வி செயலாளர்கள் மற்றும் பிற உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியையும் படிங்க…
CBSE – பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி..??
இந்த கூட்டத்திற்கு பின்னர் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாகவும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் அறிவித்தார். மேலும், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்டெர்னல் மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெறுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஒரு மாணவர் இன்டெர்னல் மதிப்பெண் தேர்ச்சி அடையவில்லை என்றால், நிலைமை சீரடைந்த பின்னர் அந்த மாணவர் தேர்வு எழுதலாம் எனகூறியுள்ளார். 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகளை நடத்துவதற்கு ஜூன் 1 ஆம் தேதி நிலைமை ஆய்வு நடத்திய பின்னர் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தேர்வுகள் தொடங்குவதற்கு முன் குறைந்தது 15 நாட்களுக்கு இந்த தேர்வு தேதி அறிவிப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.